அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் ஆலோசனை கூட்டம்நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா குமாரபாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் நமது அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டில் நமது அமைப்பிலிருந்து மாநாட்டிற்கு செல்வது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு முருக பக்தர்களை இந்த மாநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாட்டிற்கு இரண்டு வாகனங்கள் மூலம் நமது உறுப்பினர்களை அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சபரிநாதன் குமாரபாளையம் பொறுப்பாளர் ராஜேந்திரன் தங்கவேல் ஜெகதீசன் உதயசூரியன் வாசுதேவன் மாதேஸ்வரன் பாலகிருஷ்ணன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bydrrramesh

Jun 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *