அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர் கிளை உறுப்பினர் சந்திப்பு கூட்டம் 28/06/25 மாலை 6.30 முதல் 8.00 மணி வரை தஞ்சை கலைவாணி மன்றத்தில் துணைத் தலைவர் ஜெகஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாட்டில் இந்திய ரயில்வேதுறை பயணியர்களுக்கு செய்யும் சேவைகளில் ஏபிஜிபியின் பங்கு குறித்து விவாதிக்கப் பட்டது. தஞ்சாவூர் விழுப்புரம் இரட்டை ரயில் பாதை விரைவில் அமைக்க ரயில்வே அதிகாரிகளுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது மதுரையில் கடந்த 22/06/25 நடந்த தென் தமிழ்நாடு நிர்வாகிகள் கூட்டத்தில்,திரு விவேகானந்தன் ஜி தேசிய இணைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடந்தபோது, நம் இயக்கத்தின் பாடல் பாடிய பின் ,பக்கத்து மாவட்டங்களில், தாலுகாக்களில் நமது நுகர்வோர் இயக்க கிளை விரிவாக்கம் குறித்து திரு விவேகானந்தன் ஜி, திரு சத்தியபாலன் ஜி தென் தமிழ்நாடு அமைப்பாளர் அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் பற்றி ஜெகஜீவன்ஜி துணைத் தலைவர் தென் தமிழ்நாடு விரிவாக விளக்கி பேசினார்.அனைவரும் ஏபிஜிபி கிளை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தார்கள்.அடுத்த கூட்டம் ஜுலை மூன்றாம் சனிக்கிழமை19/07/25 அன்று நடைபெறும் என்று தீர்மானிக்கப் பட்டது.

Bydrrramesh

Jun 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *