Month: July 2025

நீண்ட நாளாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் பகுதியில் வேகத்தடை இன்றி பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகினார்கள் அதை சரி செய்ய வேண்டுமென்ற பொது மக்களின் கோரிக்கை கனவு இன்று நினைவாகியுள்ளது இதேபோன்று பொதுமக்கள் அதிகளவு செல்லும் பகுதியில் ஆபத்து நிறைந்த பகுதி என்றால் அங்கு வேகத்தடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொற்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து பள்ளிபாளையம 🙏🙏🙏🙏 நாமக்கல் மாவட்டம்

தமிழக ஏபிஜிபி நுகர்வோர் அமைப்பின் சார்பாக ரயில்வே மந்திரிக்கு டெல்லி ரயில் பவனில் இன்று ஜூன் 30 அன்று மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் அகில பாரத அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய 3 கோரிக்கைகளும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டி 6 கோரிக்கைகளும் அளிக்கப்பட்டது. அகில பாரத கோரிக்கைகளாவது.1. ராஜதானி, துரந்தோ மற்றும் சதாப்தி ஆகிய பிரீமியம் ரயில்களில் படிப்படியாக அதிகரிக்கும் டிக்கெட் கட்டணமான பிரீமியம் தத்கால் முறையை விலக்கிக் கொள்ள வேண்டும். 2. ரயில் பயணிகளுக்கான முன்பதிவில் கடைசியாக ரயில்வே மூலம் நிச்சயிக்கப்பட்ட அட்டவணையை வெளியிடும்போதுகூட காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு “ரத்து கட்டணம் ” வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் .3. அனைத்து ரயில்களிலும் அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் தற்போது உள்ள ஒரு மேற்கத்திய கழிவறை மூன்று இந்திய கழிவறை என்ற முறையை மாற்றி இரண்டு மேற்கத்திய கழிவறை மற்றும் இரண்டு இந்திய கழிவறை உடைய வடிவமைப்பை உருவாக்க வேண்டும். தமிழகத்திற்கான கோரிக்கைகளாக 1. அதிகமான மெமூ ரயில்களை இயக்கும் வகையில் மதுரையில் மெமூ ஷெட் அமைக்க வேண்டும். 2. .திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஒரு டெர்மினல் ஆக உருவாக்குவது மூலம் அதிக ரயில்களை திருவண்ணாமலைக்கு இயக்க கோரிக்கை. 3. சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே பகல் நேரத்தில் அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். 4. தற்போது திருச்சியில் இருந்து காரைக்குடிக்கும் காரைக்குடியில் இருந்து விருதுநகருக்கும் உள்ள ரயிலை இணைத்து தூத்துக்குடி வரை அந்த ரயிலை நீடித்து திருச்சிக்கும் தூத்துக்குடிக்கும் ஒரு புதிய ரயிலை இயக்க வேண்டும். 5.திருவனந்தபுரம் வடக்கு அல்லது கொல்லத்தில் இருந்து புனலூர் தென்காசி ராஜபாளையம் மதுரை பழனி கோயம்புத்தூர் திருப்பூர் வழியாக சேலம் அல்லது ஈரோடுக்கு ஒரு ரயிலை விட வேண்டும் 6. புதுச்சேரியில் சி டி ஓ (CDO) நிறுவுதல் தேவை. மற்றும் புதுச்சேரிக்கும் காரைக்காலுக்கும் இடையே பேரளம் திருநள்ளார் வழியாக ஒரு ரயிலை விட வேண்டும் மற்றும் மைசூர் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து ஏ பி ஜி பி நுகர்வோர் அமைப்பின் சார்பாக அகில பாரத இணை செயலாளர் எம். விவேகானந்தன் மற்றும் தென் பாரத அமைப்பு செயலாளர் எம். என். சுந்தர் அவர்களும் மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்வின் டெல்லியில் உள்ள ரயில் பவன் அலுவலகத்தில் அளித்தனர்.

டெல்லியில் ரயில்வே அமைச்சரிடம், தமிழக ABGP சார்பில் மனு சமர்ப்பிக்க சென்றABGP நிர்வாகிகள், திரு.M.N. சுந்தர் ஜி, தென் மாநிலங்களின் அமைப்பு செயலாளர்,மற்றும் திரு.M. விவேகானந்தன்ஜி, அகில பாரத இணை செயலாளர்.