Month: August 2025

அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து. ஆகஸ்ட் 23 & 24 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருச்சிராப்பள்ளியில் நடந்த விவசாய கண்காட்சியில் நமது ABGP சார்பில் மாநில மகளிர் விழிப்புணர்வு பிரிவு பொறுப்பாளர் திருமதி.V.சண்முகப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பாலதண்டாயுதம் நம்முடைய நுகர்வோர் அமைப்பை பற்றி மக்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தஞ்சாவூர் (National Consumer movement, Thanjavur)நமது அனைத்து ஏபிஜிபி உறுப்பினர்கள் தஞ்சாவூர் கிளை சார்பாக ரக்ஷா பந்தன் விழா 24/08/25, ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சை மானம்புசாவடி கலைவாணி மன்றம் மண்டபத்தில் மாலை 6.30 முதல் 8.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக இயக்கப் பாடல் பாடப்பட்டது.உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ரக்ஷை கட்டிக் கொண்டனர்.திரு ஜெகஜீவன் துணைத் தலைவர் அவர்கள் இனிப்பு வழங்கி ரக்ஷா பந்தன் விழா வாழ்த்துக்கள் கூறி உரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர் திருமலை ஜி , ஜெகஜீவன் உடன் தஞ்சாவூர் அம்ரிதா உயர்நிலைப் பள்ளிக்கு 22/08/25 அன்று விஜயம் செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ரக்ஷ கட்டி இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.இன்றையகூட்டத்தில் 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஆகஸ்ட்,2025, மாதத்தில் மட்டும் இன்று வரை எட்டு புதிய உறுப்பினர்கள் தஞ்சை கிளையில் சேர்ந்துள்ளனர் . தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.திரு இராமரத்தினம்ஜி முன்னாள் மூத்த (senior) ஆர் எஸ் எஸ் கார்யவாக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ராமகிருஷ்ணர் மடம் மற்றும் புதிய இளைஞர் மையம் திறப்பு விழாவில்( 26/8 to 29/8) ஏபிஜிபி உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏபிஜிபி பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. செயற் குழு உறுப்பினர் N D நாகராஜன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து தேநீர் வழங்கி உபசரித்தார்.அடுத்த கூட்டம் செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்.ஜெகஜீவன், ஏபிஜிபி துணைத் தலைவர்.

இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.V.M.நாகராஜ் ஜீ தலைமை தாங்கினார் தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு.ச.சத்யபாலன் ஜீ முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.V.M.நாகராஜ் ஜீ – மருத்துவ காப்பீடு திட்டத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசினார்.…

ஏபிஜிபி மாதாந்திர கூட்டம் 23.08.25 அன்று தேனியில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்க பாடல் முன்னிலை : S.ரவிச்சந்திரன் சகாகர் பாரதி மாநில துணைத் தலைவர்.அவர்கள்,தலைமை: திரு.ச.சத்தியபாலன் அவர்கள்,தென் பாரத இணை அமைப்புச் செயலாளர், கூட்ட நெறியாள்கை .RTI விழிப்புணர்வு குறித்து.திரு.ப.வேலு அவர்கள்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ABGP. கூட்ட பொருள் குறித்து..திரு.ப.வேல்முருகன் .ABGP தேனி கிளைநன்றியுரை.…

நெல்லை மாவட்ட (ABGP ) அகில பாரதிய கிராக் பஞ்சாயத்தின் ஆகஸ்டு மாத கூட்டம் *ரக்க்ஷா பந்தன் விழாவினை ராக்கி கயிறு கட்டி சகோதர தத்துவத்தை விளக்கியும்மேலும் மாவட்ட விதி ஆயம் பொறுப்பாளராக வழக்கறிஞர் திரு.செந்தில் குமார் .B.A..B.L.. அவர்களை நியமனம் செய்தும்புதிய உறுப்பினர்கள்மாநிலத்திலே அதிகமான சேர்க்கவும் திரு.S.R. சுப்பிரமணியன் ஜி உரையாற்றினார்..அதன்பின் திரு.சுரஷ் B.sc.Rtd.s.i.ஜி நன்றி உரையாற்றி கூட்டம் சிறப்பாக நிறைவுப் பெற்றது…

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் கோவை மாநகரின் 9வது மாதாந்திர கூட்டம் ராம் நகரில் உள்ள RSS-காரியாலயத்தில் 17/08/2025 அன்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் மொத்தம் 16 பேர்.

கோயம்புத்தூர் நகர மாதாந்திரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்… விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (Workshop Awareness Program) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) – வழக்கறிஞர் மூலம்வங்கி தொடர்பான விழிப்புணர்வு – வங்கி மேலாளர் மூலம்இணைய குற்றங்கள் (Cyber Crime) விழிப்புணர்வுமருத்துவக்…

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் 15-08-2025 வெள்ளி கிழமை சீதா கல்யாண மண்டபத்தில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP தென் மாநில நிர்வாகிகள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.இந் நிகழ்வில் தென் பாரத அமைப்பு செயலாளர் திரு ஸ்ரீ M.N.சுந்தர் ஜீ அவர்களும் அமைப்பின் தேசிய இனை செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீ விவேகானந்தன் ஜீ அவர்களும் தென் பாரத இனை அமைப்பு செயலாளர் ஸ்ரீ சத்யபாலன் ஜீ அவர்களும் தென் மாநில தலைவர் ஸ்ரீ தமிழ்மணிமுத்துவேலப்பன் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆயம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திரு சுந்தர்ஜி அவர்கள் மாநிலத்தில் அமைப்பு விரிவாக்கம் பற்றியும் கிளை செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் நிர்வாகிகளுக்கு ஆலோசகர் வழங்கினார்.பின்னும் திரு விவேகானந்தன் ஜீ அவர்கள் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் அமைப்பு செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் செயல்பாடில்லாத மாவட்டத்தில் கிளைகள் செயல்படவும்.கிளையே இல்லாத மாவட்டங்களில் கிளை உருவாக்கமும் செய்ய ஆலோசனை வழங்கினார்கனார் பின்னர் சாந்தி மந்திரத்துடன் மாலை 4 அளவில் இனிதே முடிவுற்றது.பிறகு மாநில நிர்வாகிகள் மற்றும் கோபி கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அனைவருக்கும் ராக்கி கட்டி மற்றும் இனிப்பு வழங்கி ரக்க்ஷாபந்தன்விழா கொண்டாடப்பட்டது.

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.