பெறுநர்; உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம்.ஐயா; வணக்கம் நாகப்பட்டினம் மாவட்டம் அகில பாரதிய க்ரஹக் பஞ்சாயத்துடன் (ABGP) இணைந்து அகில பாரதிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கடந்த சனிக்கிழமை 25/10/2025 அன்று கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்தத் தீர்மானம் மக்களுக்கான தீர்மானம் ஆகும். தீர்மானம் -1 நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவ உயர் சிகிச்சைக்கு அனுபவம் மிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் உயர் சிகிச்சை பிரிவில் (ICU) வில் 10 எண்ணிக்கை கொண்ட நோயாளிகளின் படுக்கை மட்டுமே உள்ளது அதை அதிகப்படுத்தவும். மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கான மருந்துகளை சரியான முறையில் வைத்திருக்க நாகை மாவட்ட ஆட்சியர் ஆன தாங்கள் மருத்துவ துறைக்கு அறிவுறுத்த வேண்டும். ICU மருத்துவ பிரிவில் நோயாளிகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறையை அங்கு உள்ள செவிலியர்கள் பயன்படுத்தி வருகின்றனர் நோயாளிகள் அவசர சிகிச்சை கிரீன் வார்டு அருகே உள்ள கழிப்பறைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று செவிலியர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது, மருத்துவத்துறை அதை ஆய்வு செய்து நோயாளிகள் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்மானம் -2 நாகப்பட்டினம் மாவட்டம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நீர் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் பாதாள சாக்கடை சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பலன்கள் ஆங்காங்கே அதிக அளவில் சரி செய்யாமல் சாலைகள் சேதம் அடைந்து கிடைக்கிறது. பணிகளை விரைவாக முடிக்க சாலைகளை சரி செய்ய தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று ABGP சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.தீர்மானம் -3 நாகை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடு, குதிரை, பன்றி, நாய் போன்ற விலங்குகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். சாலையில் தெரியும் விலங்குகளை பிடித்து அப்புறப்படுத்தி விபத்து இல்லா போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.தீர்மானம் -4 நாகப்பட்டினம் முதல் திருவாரூர் வரையிலான புதிதாக அமைக்கப்படும் ஈசியா சாலையில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். திருநங்கைகள் நாகூர் டு புத்தூர் ஈ சி ஆர் சாலையில் இரவு நேரங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு விதமான அச்சுறுத்தலையும் முக சுழிப்பையும் ஏற்படுத்துகிறது. நாகை மாவட்ட காவல்துறை மூலமாக ECR பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீர்மானம்-5 பருவ மழை காலம் என்பதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் செல்லாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.தீர்மானம் -6 நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான ஒரு அலுவலகத்தை கட்டி அதில் அவர் மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகல பாரதிய க்ரஹக் பஞ்சாயத்து மற்றும் அகில பாரதிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
