நவம்பர் 9 2025 .அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தென்தமிழ் நாட்டின் மாநில பயிற்சி முகாம் கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள சேவாஸ்ரமத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 30 வரை நடைபெற்றது..

இக்கூட்டத்திற்கு தலைமை தென் பாரத அமைப்புச் செயலாளர் திரு எம். என் சுந்தர் ஜி மற்றும் அகில பாரத இணைச் செயலாளர் திரு விவேகானந்தன் ஜி அவர்கள் முன்னிலை வைத்தார்கள்..

தென்தமிழக மாநில தலைவர் திரு தமிழ்மணி அவர்கள் தலைமை உரை வழங்கி சிறப்பித்தார்.

தென் தமிழக மாநில செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த அமர்வை தொடங்கி வைத்து வழி நடத்தினார்.
இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு குறித்து திரு. ஓம் பிரகாஷ் பீகார் மாநில ஏபிஜிபி செயலாளர் அவர்கள் கருத்தரங்கில் எடுத்து உரைத்தார்.அதில் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் , கலப்பட உணவு அதை தவிர்க்கும் முறைகள் உணவு பண்டங்களில் காலாவதியான ,தரம் இல்லாத எண்ணெய்கள், உற்பத்தி, காலாவதி தேதி அதை நாம் எப்படி கண்டறிவது என்றும் நுகர்வோராகிய நாம் இது விஷயத்தில் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம் என அறிவுறுத்தினார். உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் அடைப்பான்களில் பயன்படுத்துவதன் எதிர் மற்றும் பக்க விளைவுகளை விவரமாக எடுத்துரைத்தார் .கை, கால் சுத்தம் உணவுக்குப் பின் ,உணவுக்கு முன் முக்கியத்துவம் குறித்து தெளிவாக விளக்கினார். இந்த உணவு பாதுகாப்பு சம்பந்தமாக மாநில, மத்திய அரசுகளின் அமைப்பு முறைகளையும் அதன் அதிகார வர்க்கத்தையும் , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாவட்ட அளவில் உள்ள அமைப்பு ,அதன் படிநிலைகள் அவர்களிடம் எப்படி முறையிட வேண்டும் அதற்கான குறை தீர்க்கும் முறைகளைப் பற்றியும் நுகர்வோர்களுக்கு நாம் எப்படி எடுத்துச் சொல்ல முடியும் என்றும் தெரிவித்திருந்தார் .

இரண்டாவதாக விதிகள் ஆயம் பொறுப்பாளர் திரு. சாய் குமரன் அவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். நடைமுறையாக எப்படி ஒரு தகவல் அறியும் சட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசில் கேட்பது என்றும் அதற்குரிய குறைந்தபட்ச சட்ட அறிவு என்ன தேவை என்பதையும் விதிகள் & பிரிவு வாரியாக வந்திருந்த பயிற்சியாளர்களுக்கு தெரிவித்தார் .

பிறகு, ஓம் பிரகாஷ் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது .. கோபிசெட்டிபாளையம் மற்றும் ஈரோடு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு மாணிக்கம் அவர்கள் , சட்டப் பணிகள் ஆணைய ஆர்வலர் பவானி நீதிமன்றம் சட்டப் பணி ஆணை யங்களின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
இந்த அமர்வை திரு சக்திவேல் ஈரோடு மாவட்ட தலைவர் அவர்கள் வழி நடத்தினார்.. அதில் எப்படி புகார் செய்வது, மக்கள் நீதிமன்றம் அதன் பணிகள் போன்றவை மிகத் தெளிவாக விவரிக்கப் பட்டன .

நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் திரு. சபரிநாதன் அவர்கள், காவிரி ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறைக்கழிவுகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார். ABGP ஒரு புகாரை நாமக்கல்மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதன் மூலம் சில சாயப் பட்டறைகள் ப்பட்டதையும் மிக தெளிவாக விவரித்தார்..
இதில் ABGPன் முயற்சியால் அந்தப் பகுதியில் என்ன மாற்றங்கள் நடைபெற்றன என்பதை விளக்கினார்.

இறுதி அமர்வில் முதல் கட்டமாக தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு ச.சத்திய பாலன் அவர்கள் அகில பாரத அளவில் ஏ பி ஜி பி விதித்த ஐந்து கோட்பாடுகளை அழகாக எடுத்துரைத்தார்..

பிறகு திரு எம். என் . சுந்தர் ஜி அவர்கள் தேசிய நுகர்வோர் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் சமர்ப்பண தினம் குறித்து விளக்கினார். அந்த சமர்ப்பண தினத்தில் நாம் சமர்ப்பணத்தை அளிப்பதன் மூலம் தான் ABGP ன்
வளர்ச்சி மற்றும் உயிரோட்டம் உள்ளது என்பதை ஆணித்தரமாக விவரித்திருந்தார் ..

பிறகு உரையாற்றிய தேசிய இணைச் செயலாளர் திரு. விவேகானந்தன் பயிற்சியில் நடந்த முறைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அழகாக விவரித்தார். இதற்காக அனைத்து பயிற்சியாளர்களையும் மிகவும் பாராட்டினார.

அவர் அகில பாரதிய கிரஹக் பஞ்சாயத்து எந்தெந்த வழிகளில் நுகர்வோர்களுக்கு சட்டங்கள் தேவை என்பதை அறிந்து அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ABGP சட்டத்தை இயற்றியது குறித்து ஆரம்பம் முதல் முடிவு வரை தெரிவித்து இருந்தார்.

இறுதியாக பேசிய மாநில அபியாஷ் மண்டல பொறுப்பாளர் திரு . குலோத்துங்க மணியன் அவர்கள் இதுவரை மாநிலம் மற்றும் மத்திய நிர்வாகத்தின் கீழ் தான் மிகப் பெருவாரியான திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்கள் ஏபிஜிபி முயற்சியால் தீர்க்கப்பட்டு இருக்கின்றன..
இது இதனை அடியொற்றி மாவட்டங்களும் இதுபோல் அன்றாடம் நடக்கும் உள்ளூர் பிரச்சனை கையில் எடுத்து அங்கே உள்ள அரசு நிர்வாகிகளிடம் புகார் அளித்து அவர்களை வேலை செய்ய வைப்பதன் மூலம் தான் நாம் நமது லட்சியத்தை அடைய முடியும் என்றும், தனி ஒரு நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் தான் ஒட்டு மொத்த சமுதாயம் விழிப்புணர்வு பெறும் என்று நுகர்வோர் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
எனவே முழு நுகர்வோர் விழிப்புணர்வு பெற பயிற்சி அவசியம் என்றும் விரைவில் ஒரு லட்சிய நுகர்வோர் சமுதாயத்தை அடைய நாம் குறிக்கோளாக கொள்ள வேண்டும் எனவும் விவரித்தார்.

மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு.இரா.இரமேஷ் அவர்களின் நன்றியுரை மற்றும் சாந்தி மந்திரத்துடன் இந்த பயிற்சி முகாம் நிறைவு பெற்றது..

ஏ பி ஜி பி தென்தமிழ்நாடு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *