மாநில அபியாஸ் மண்டல் பொறுப்பாளர் திரு . குலோத்துங்க மணியன் அவர்கள் இதுவரை மாநிலம் மற்றும் மத்திய நிர்வாகத்தின் கீழ் தான் மிகப் பெருவாரியான திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்கள் ஏபிஜிபி முயற்சியால் தீர்க்கப்பட்டு இருக்கின்றன.. இது இதனை அடியொற்றி மாவட்டங்களும் இதுபோல் அன்றாடம் நடக்கும் உள்ளூர் பிரச்சனை கையில் எடுத்து அங்கே உள்ள அரசு நிர்வாகிகளிடம் புகார் அளித்து அவர்களை வேலை செய்ய வைப்பதன் மூலம் தான் நாம் நமது லட்சியத்தை அடைய முடியும் என்றும், தனி ஒரு நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் தான் ஒட்டு மொத்த சமுதாயம் விழிப்புணர்வு பெறும் என்று நுகர்வோர் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.எனவே முழு நுகர்வோர் விழிப்புணர்வு பெற பயிற்சி அவசியம் என்றும் விரைவில் ஒரு லட்சிய நுகர்வோர் சமுதாயத்தை அடைய நாம் குறிக்கோளாக கொள்ள வேண்டும் எனவும் விவரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *