அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து
தஞ்சாவூர்
ஏபிஜிபி தஞ்சாவூர் மாதாந்திர கூட்டம் 06/12/25 சனிக்கிழமை அன்று மாலை 6.30 முதல் 8.00 மணி வரை துணைத் தலைவர் ஜெகஜீவன் தலைமையில் மானம்புசாவடி கலைவாணி மன்றத்தில் நடைபெற்றது.ஏபிஜிபி இயக்கத்தின் பாடல் பாடி கூட்டம் தொடங்கியது.
திரு சண்முக சுந்தரம் ஜி கடந்த நவம்பரில் கோவையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்.தன் அனுபவங்களை விவரித்து கூறினார்.
தஞ்சையில் டவுன் பஸ் நிலையம் விரிவாக்கம், இரவு நேரத்தில் 11.00 மணிக்கு பிறகு மருத்துவ கல்லூரிக்கு டவுன் பஸ் இயக்கம் கொண்டு வர வேண்டும், மற்றும் தஞ்சாவூர் விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைவில் நிதி ஒதுக்கி அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு ஏபிஜிபி சார்பாக ரயில்வே துறைக்கு மீண்டும் அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.
திரு N D நாகராஜன் ஜி தஞ்சை ஏபிஜிபி குழு உறுப்பினர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நன்றி கூறினார். 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜெகஜீவன் .
ஏபிஜிபி தஞ்சாவூர்,
9443885853.
