சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு பாஜக மண்டல் தலைவர் சவால் தமிழகத்தில் 100 நாள் வேலையை மத்திய அரசு நிறுத்தி விடும் என சோழவந்தான் தொகுதி மக்களிடம் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளும் வெங்கடேசன் எம் எல் ஏ அதை நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு தர தயாராக இருப்பதாக பாஜக சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் சவால் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் பாரதிய ஜனதா கட்சி சோழவந்தான் மண்டல் சார்பில் மேற்கொள்ளப்பட்டது இதில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்களுடன் விளக்கி கூறினர் இந்த கூட்டத்தில் பேசிய சோழவந்தான் மண்டல் தலைவர் திருவேடகம் கதிர்வேல் பேசுகையில் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விடும் என திமுக அரசு தொடர்ந்து பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது அதே போல் சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம்எல்ஏவும் சோழவந்தான் தொகுதி மக்களிடம் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்பதே உண்மை அவ்வாறு இருக்க மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் தவறான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வரும் சோழவந்தான் திமுக எம்எல்ஏ வெங்கடேசனுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 100 நாள் வேலை திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி நிறுத்தி விடும் என கூறும் வெங்கடேசன் எம் எல் ஏ அதை நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு எனது சொந்த பணத்தை தருகிறேன் இல்லை என்றால் அவரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் இவ்வாறு பேசினார்.
