அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர் கிளையின் ஜூலை மாத உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் 19/07/25 சனிக்கிழமை தஞ்சை கலைவாணி மன்றத்தில் தஞ்சை செயற் குழு உறுப்பினர்கள் திரு N D நாகராஜன், திரு சுப்பாராவ் அவர்களின் ஏற்பாட்டில் திரு ஜெகஜீவன் துணைத் தலைவர் தலைமையில் மாலை 6.30 க்கு தொடங்கி 8.00 மணி வரை நடைபெற்றது கூட்டத்தில்,வங்கிகள் தங்க நகைக் கடன் வழங்கும் போது (RBI )ரிசர்வ் வங்கியின் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் விவரமாக தனது Facebook பதிவில் தென் தமிழ்நாடு ஏபிஜிபி தலைவர் திரு தமிழ்மணி ஜி Tamilmani Muthuvelappan வெளியிட்டிருந்த குறிப்புகளை உறுப்பினர்களுக்கு விளக்கி கூறினார் திரு ஜெகஜீவன் அவர்கள்.மேலும் வங்கிகள் தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வரும் முத்ரா கடன் பெற யாரை, எங்கே, எப்படி அணுகுவது பற்றிய விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது.(உங்கள் அருகிலுள்ள எந்த ஒரு பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி,கிராம வங்கி, NBFC (non banking finance company), அல்லது மைக்ரோ நிதி நிறுவனம் (MFI) ஆகியவற்றை நேரில் அல்லது ஆன்லைனில் அணுகலாம்.)மேலும் cashless health insurance policy எடுத்து மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேரும் போது ஒரு சில மருத்துவ மனைகளில் கடடணக்கொள்ளை கள் நடந்து வருவது குறித்து விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டது.திரு கனகராஜன் ஜி ஆர்எஸ்எஸ் தஞ்சாவூர் சங்ககாலக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் விழா தஞ்சையில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப் பட்டது.ஜெகஜீவன் Jagajeevan Saminathan துணைத் தலைவர், ஏபிஜிபி, தஞ்சாவூர்.9443885853.

Bydrrramesh

Jul 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.