அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தஞ்சாவூர் (National Consumer movement, Thanjavur)நமது அனைத்து ஏபிஜிபி உறுப்பினர்கள் தஞ்சாவூர் கிளை சார்பாக ரக்ஷா பந்தன் விழா 24/08/25, ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சை மானம்புசாவடி கலைவாணி மன்றம் மண்டபத்தில் மாலை 6.30 முதல் 8.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக இயக்கப் பாடல் பாடப்பட்டது.உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ரக்ஷை கட்டிக் கொண்டனர்.திரு ஜெகஜீவன் துணைத் தலைவர் அவர்கள் இனிப்பு வழங்கி ரக்ஷா பந்தன் விழா வாழ்த்துக்கள் கூறி உரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர் திருமலை ஜி , ஜெகஜீவன் உடன் தஞ்சாவூர் அம்ரிதா உயர்நிலைப் பள்ளிக்கு 22/08/25 அன்று விஜயம் செய்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ரக்ஷ கட்டி இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.இன்றையகூட்டத்தில் 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஆகஸ்ட்,2025, மாதத்தில் மட்டும் இன்று வரை எட்டு புதிய உறுப்பினர்கள் தஞ்சை கிளையில் சேர்ந்துள்ளனர் . தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.திரு இராமரத்தினம்ஜி முன்னாள் மூத்த (senior) ஆர் எஸ் எஸ் கார்யவாக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ராமகிருஷ்ணர் மடம் மற்றும் புதிய இளைஞர் மையம் திறப்பு விழாவில்( 26/8 to 29/8) ஏபிஜிபி உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏபிஜிபி பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. செயற் குழு உறுப்பினர் N D நாகராஜன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து தேநீர் வழங்கி உபசரித்தார்.அடுத்த கூட்டம் செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்.ஜெகஜீவன், ஏபிஜிபி துணைத் தலைவர்.

Bydrrramesh

Aug 25, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.