Author: drrramesh

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் மாதாந்திர கூட்டம் (ABGP) புதுக்கோட்டையில் இன்று ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை மாநில இணை செயலாளர் திரு செல்.கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பின் திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில் இன்று ஜூன் 9ஆம் தேதி திங்கட்கிழமை மாலை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

ABGP கோவை மாவட்ட மாதாந்திர கூட்டம்1/6/2025 அன்று RS புரம் சேவாஆசிரமத்ததில் நடைபெற்றது. இதில் மாநில வல்லுநர் குழு பொறுப்பாளர் திரு.குலோத்துங்க மணியன் சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில பிரச்சாரம் மற்றும் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் திரு.இரா.இரமேஷ் , கோவை கன்வினர் திரு.பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ABGP நாகப்பட்டினம் மாதாந்திர கூட்டம் மே மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேளாங்கண்ணி நாகப்பட்டினம்,காரைக்கால், பேரளம், திருநள்ளாறு வழியாக தென்னக ரயில்வே சோதனை ஓட்டம் நடைபெற்றது முன்னிட்டு தென்னக ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.