Category: Home

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் 15-08-2025 வெள்ளி கிழமை சீதா கல்யாண மண்டபத்தில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து ABGP தென் மாநில நிர்வாகிகள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.இந் நிகழ்வில் தென் பாரத அமைப்பு செயலாளர் திரு ஸ்ரீ M.N.சுந்தர் ஜீ அவர்களும் அமைப்பின் தேசிய இனை செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீ விவேகானந்தன் ஜீ அவர்களும் தென் பாரத இனை அமைப்பு செயலாளர் ஸ்ரீ சத்யபாலன் ஜீ அவர்களும் தென் மாநில தலைவர் ஸ்ரீ தமிழ்மணிமுத்துவேலப்பன் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆயம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திரு சுந்தர்ஜி அவர்கள் மாநிலத்தில் அமைப்பு விரிவாக்கம் பற்றியும் கிளை செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் நிர்வாகிகளுக்கு ஆலோசகர் வழங்கினார்.பின்னும் திரு விவேகானந்தன் ஜீ அவர்கள் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் அமைப்பு செயல்பாடுகளை மேம்படுத்தல் பற்றியும் செயல்பாடில்லாத மாவட்டத்தில் கிளைகள் செயல்படவும்.கிளையே இல்லாத மாவட்டங்களில் கிளை உருவாக்கமும் செய்ய ஆலோசனை வழங்கினார்கனார் பின்னர் சாந்தி மந்திரத்துடன் மாலை 4 அளவில் இனிதே முடிவுற்றது.பிறகு மாநில நிர்வாகிகள் மற்றும் கோபி கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அனைவருக்கும் ராக்கி கட்டி மற்றும் இனிப்பு வழங்கி ரக்க்ஷாபந்தன்விழா கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல்‌ ABGP அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, அகில பாரத நுகர்வோர் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கம் துவங்குகிறது.

அதிகப்படியாக உறுப்பினர்களை நாம் ABGP இயக்கத்தில் சேர்ப்போம்,

ரயில்வே முயற்சிக்கு ABGP பாராட்டு

ஜூலை 28, தென்னக ரயில்வே AGM திரு.கெளசல் கிஷோர் ஐ சந்தித்து, திருவண்ணாமலை ரயில் முனையம் வர ரயில்வே முயற்சிக்கு ABGP பாராட்டு தெரிவித்தது.திருச்செந்தூருக்கும் அதிக ரயில்வசதி ஏற்பட, ஆறுமுகனேரியை ரயில் முனையமாக்கவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.

ABGP Tamilnadu அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, நுகர்வோர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 28, 2025 திங்கட்கிழமை மாலை தென்னக ரயில்வே AGM கூடுதல் பொது மேலாளர் திரு.கெளசல் கிஷோர் அவர்களை சந்தித்து, திருவண்ணாமலை ரயில் முனையம் வர ரயில்வே முயற்சிக்கு ABGP பாராட்டு தெரிவித்தது.திருச்செந்தூருக்கும் அதிக ரயில்வசதி ஏற்பட, ஆறுமுகனேரியை ரயில் முனையமாக்கவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.

தென் பாரத அமைப்பு செயலாளர் திரு.M.N.சுந்தர் அவர்கள், மாநில போக்குவரத்து பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.M.அருண் பாண்டியன் அவர்கள் Arun Pandian, தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு.ச.சத்யபாலன்ஆகியோர் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மொடக்குறிச்சியில் நேற்றுவரை இருந்த ஆபத்தான கிணற்றின் நிலை இன்று மாற்றப்பட்டுள்ளது..மொடக்குறிச்சிதாலுகாவில் மாநில நெடுஞ்சாலை அருகே ஒரு கிணற்றில் தடுப்புச் சுவர் இல்லாதது குறித்து கடந்த மே மாதம் 21ஆம் தேதி வட்டாட்சியர் மற்றும் மொடக்குறிச்சி செயல் அலுவலர் அவர்களிடம் ஒரு புகார் மனு நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது.. அஞ்சல் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்ட பொறியாளர் அவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது..இதன் விளைவாக 23. 7. 2025 அன்று மேற்படி நாம் குறிப்பிட்ட அந்த கிணற்றை சுற்றி இரும்பு தடுப்புச் சுவர் போடப்பட்டு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது..

23. 7 .2025 அன்று திருப்பூர் மாவட்ட ஏபிஜிபி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் நான்கு பெண்கள் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட தலைவர் திரு வேல் தீபக் அவர்கள் முன்னிலை வைத்தார் தென் தமிழக அபியாஸ் மண்டல் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பாளர் சு. குலோத்துங்க மணியன் தலைமை ஏற்று தகவல் அறியும் சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் கட்டண முரண்பாடு பற்றியும் எடுத்துரைத்தார்..

ABGPஅகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம்சார்பாக புதுச்சேரியில்மாதாந்திரவிழிப்புணர்வு நிகழ்ச்சி தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்ற தலைப்பில்நாள் 20.07.25 ஞாயிற்றுக்கிழமைநேரம் : மாலை 6.30.To 8.00 மணி வரைஇடம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கானதலைமை திரு.C.A.P.பிரபாகரன் ஆடிட்டர் வரவேற்புரைதிருமதி D.தாட்சாயினி B.comமஹிளா ஜாக்ரண்பிரமுக் ABGP முன்னிலைதிரு Dr.S.ஆசைத்தம்பி BMSமாநில தலைவர்பாரதிய மஸ்தூர் சங்கம் திரு Dr.K.இளங்கோவன்அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித்ABVP திருமதி உமாகுருமூர்த்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு (பரியாவரன்) பொறுப்பாளர்வட தமிழ்நாடு திருமதி சேதுராமலக்ஷ்மிTeamLeader ABGP தகவல்அறியும்…

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர் கிளையின் ஜூலை மாத உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் 19/07/25 சனிக்கிழமை தஞ்சை கலைவாணி மன்றத்தில் தஞ்சை செயற் குழு உறுப்பினர்கள் திரு N D நாகராஜன், திரு சுப்பாராவ் அவர்களின் ஏற்பாட்டில் திரு ஜெகஜீவன் துணைத் தலைவர் தலைமையில் மாலை 6.30 க்கு தொடங்கி 8.00 மணி வரை நடைபெற்றது கூட்டத்தில்,வங்கிகள் தங்க நகைக் கடன் வழங்கும் போது (RBI )ரிசர்வ் வங்கியின் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் விவரமாக தனது Facebook பதிவில் தென் தமிழ்நாடு ஏபிஜிபி தலைவர் திரு தமிழ்மணி ஜி Tamilmani Muthuvelappan வெளியிட்டிருந்த குறிப்புகளை உறுப்பினர்களுக்கு விளக்கி கூறினார் திரு ஜெகஜீவன் அவர்கள்.மேலும் வங்கிகள் தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வரும் முத்ரா கடன் பெற யாரை, எங்கே, எப்படி அணுகுவது பற்றிய விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டது.(உங்கள் அருகிலுள்ள எந்த ஒரு பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி,கிராம வங்கி, NBFC (non banking finance company), அல்லது மைக்ரோ நிதி நிறுவனம் (MFI) ஆகியவற்றை நேரில் அல்லது ஆன்லைனில் அணுகலாம்.)மேலும் cashless health insurance policy எடுத்து மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேரும் போது ஒரு சில மருத்துவ மனைகளில் கடடணக்கொள்ளை கள் நடந்து வருவது குறித்து விழிப்புணர்வு செய்தி பகிரப்பட்டது.திரு கனகராஜன் ஜி ஆர்எஸ்எஸ் தஞ்சாவூர் சங்ககாலக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் விழா தஞ்சையில் சிறப்பாக கொண்டாட திட்டமிடப் பட்டது.ஜெகஜீவன் Jagajeevan Saminathan துணைத் தலைவர், ஏபிஜிபி, தஞ்சாவூர்.9443885853.

ஜூலை 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை கோயம்புத்தூர் மாநகர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது கீழ்க்கண்ட விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

1.மாநகராட்சி வார்டு உறுப்பினரின் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 2.108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு. 3.ஆகஸ்ட 9ஆம் தேதி வரும் ரக்ஷா பந்தன் விழாவில் குழுவாக பிரிந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்களை…

திருவண்ணாமலை ரயில் நிலையம், ரயில் முனையமாக மாற்றப்பட்டு அதிக ரயில்கள், பக்தர்களின் பயணத்துக்கு வழிவகுக்க, “தேவை திருவண்ணாமலை ரயில் முனையம் ” என்ற ABGPகையெழுத்து இயக்கம் துவக்கிட முடிவெடுத்து ஜூலை 11 அன்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில் தலைவர் திரு.ரோஷன் லால், இணை செயலாளர் திரு.சம்பத், தென்பாரத ஏபிஜிபி அமைப்பு செயலாளர் திரு.எம்.என்.சுந்தர் ஜி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You missed

ABGP தேசிய நுகர்வோர் அமைப்பு 28-09-2025புதுக்கோட்டை மாவட்டம், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொன்னமராவதி தாலுகா கிளை கூட்டம் கண்டியாநத்தம் ஊராட்சியில் இன்று 28-09-2025 காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இகூட்டத்திற்கு தாலுகா ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். ஆண்டியப்பன், ராஜேந்திரன், அழகு, அருன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாநில இணை செயலாளர் செல்.கனகராஜ் அமைப்பின் செயல்கள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,.1, பொன்னமராவதி தாலுகா, கண்டியாநத்தம் ஊராட்சி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் சுமார் 300 நபர்கள் கேசராப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் பணம் செலுத்தி பாதிப்புக்குள்ளான புகார் தொடர்பாக மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டுதல்.2,பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசுக்கு கோரிக்கை.3, தொழில்வளம் பின் தங்கிய பொன்னமராவதி தாலுகாவில் தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆவண செய்ய கோரிக்கை.4 ,புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புனரி, நத்தம் வழியாக ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல்., இக்கூட்டத்தில் கண்ணுச்சாமி, சுமதி, பாக்கியலெட்சுமி, பம்பையன், காடன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.5, பொன்னமராவதி தாலுகாவில் அனைத்து கிராமங்களிலும் ABGP தேசிய நுகர்வோர் அமைப்பின் கிளைகள் அமைப்பது,முடிவில் சதீஸ்குமார் நன்றி கூறினார்.